Thursday, December 12, 2013


சத்தானஉணவு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமான , அத்தியாவசிய மூலப்பொருள்களை செல்களுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் வழங்குகின்ற உணவு ஆகும். பல பொதுவான சுகாதார பிரச்சினைகளையும் ஆரோக்கியமான உணவைக் கொண்டு தடுக்கவோ தவிர்த்துவிடவோ செய்ய முடியும்.

ஊட்டச்சத்துக்களில் ஏழு முக்கியமான பிரிவுகள் உள்ளன: கார்போஹைட்ரேட்கள், கொழுப்புக்கள், ஃபைபர் சத்துக்கள் , தாதுக்கள் , புரதம், வி்ட்டமின், மற்றும் தண்ணீர்.
இந்த ஊட்டச்சத்து பிரிவுகளை பேரளவு ஊட்டச்சத்துக்கள் (பெரிய அளவிற்கு தேவைப்படுபவை) அல்லது நுண்ணலகு ஊட்டச்சத்துக்கள் (சிறிய அளவுகளுக்கு தேவைப்படுபவை) என்று வகைப்படுத்தலாம்.

பேரளவு ஊட்டச்சத்துக்கள் என்பவை கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புக்கள், ஃபைபர் சத்துக்கள் , புரதங்கள் மற்றும் தண்ணீர் ஆகியவையாகும்.
நுண்ணலகு ஊட்டச்சத்துக்கள் என்பவை தாதுக்களும் விட்டமின்களும் ஆகும்.
மற்ற ஊட்டச்சத்துக்கள் ஆண்டியாக்ஸிடன்ஸ் மற்றும் பைத்தோகெமிக்கல்ஸ்.

நாம் உண்ணும் உணவு கட்டுப்பாடன்றி இருந்தால் அதுவே நமக்கு ஊறாக அமையும். இன்றைய உணவு நாளைய பிணி என்ற நிலை மாறி உண்ணும் உணவையே நமக்கு நிவாரணியாக மாற்றியைமைக்க சில வழிகாட்டுதல்கள்.
எவ்வளவு, எவ்வாறு உண்பது? உணவு உண்பதில் பின்வரும் நடைமுறைகளைக் கவனிப்பது நலம் பயக்கும்

உணவு உட்கொள்ளும் நேரம்
உணவை அதற்குரிய சரியான வேளைகளில் உட்கொள்ள வேண்டும். நேரம் தவறிய உணவு முறைகள் உடல் மற்றும் மன நலத்துக்கு ஊறு விளைவிக்கலாம்.

உண்ணும் முறை
உணவு உண்பதில் அவசரம் காட்டக் கூடாது. நன்கு மென்ற பின்னரே விழுங்க வேண்டும். ஒரு நாளில் எட்டு முதல் பன்னிரண்டு கோப்பைகள் தண்ணீர் அருந்த வேண்டும்.

உண்ணும் அளவு
ஒவ்வொருவரும் தனது வயது, உயரம், எடை, செயல்பாடுகள், வேலை, விளையாட்டு, கடின உழைப்பு, உடற்பயிற்சி முதலியவற்றைக் கருத்தில் கொண்டு தனக்கு தேவையான அளவு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சமையல் முறை
நாம் தோ்ந்தெடுக்கும் உணவுகள் எவ்வளவு சிறந்ததாக இருப்பினும் சமைக்கும் முறை நல்லதாக அமையாவிடில் அதுவே மோசமாகிவிடும்.




சுறுசுறுப்புத் தரும் பத்து சூப்பர் உணவுகள் எப்போதும்.

தண்ணீர்


சர்க்கரை வள்ளிக்கிழங்கு- பீட்டா கராட்டினும்,பாஸ்பரசும் புற்று நோயை எதிர்த்து அழிக்கும் நச்சு முறிவு மருந்தான ஆன்டிடாக்ஸிடென்ட்டுகளும் இந்தக் கிழங்கில் அடங்கியுள்ளன.


பீன்ஸ் - உடல் வளர்ச்சிக்கு தேவையான புரதமும் உடலின் சக்திக்குத் தேவையான மாச்சத்தும் இதில் அதிகம் உள்ளன. இதில் கொழுப்பும் குறைவு. இரும்புச்சத்தும் நார்ச்சத்தும் நன்கு உள்ள காய் இது. இதனால் உடல்களைப்போ மாரடைப்போ ஏற்படாது.


தக்காளி - வைட்டமின் ‘ஏ’ நிறைந்தது. புது மணமக்கள் தாம்பத்திய வாழ்வில் வெற்றிகரமாக இருக்க உதவும். இதில் உள்ள லைகோபென் என்ற பொருள் உதவுகிறது. இந்தப் பொருள் புற்றுநோயை அழிக்கும் நச்சு முறிவு மருந்தாகவும் செயல்படுகிறது. தினமும் தக்காளி சூப் தக்காளிச் சாறு சாப்பிட மறவாதீர்கள்.


பால் மற்றும் தயிர் - கொழுப்பு நீக்கப்பட்டாலும் பாலும் தயிரும் எலும்புகளை உறுதியானவைகளாத் தொடர்ந்து பராமரித்து வருகிறது. பால் பிடிக்கவில்லை எனில் தயிரை நன்கு சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள கால்ஷியம் எலும்பு உறுதிக்குப் பயன்படுகிறது.



வாழைப்பழம் - நரம்பு மண்டலத்தை இயக்குவதில் இப்பழம் பெரும்பங்குவகிக்கின்றது. உடற்பயிற்சி முடிந்ததும் இதயம் வேகவேகமாகத் துடிக்கிறதே இது ஏன் பொட்டாசியம் குறைந்துவிட்டதும் ஒரு காரணம். உடல் தசையும் இதயத் தசையும் சீராக இயங்கவும் இந்த உப்பு உதவுகிறது என்று டாக்டர் ரோஸன் ஃபீல்ட் கூறுகிறார். எனவே உடற்பயிற்சியோ அதிக வேலையோ முடிந்ததும் உடன் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள். இதன் மூலம் உடலுக்கு 105 கலோரி கிடைக்கும். மாச்சத்தும் பொட்டாசியம் உப்பும் சேர்ந்து உடலுக்கு வலிமையை ஊட்டிவிடும். பொட்டாசியம் உப்பினால் சுறுசுறுப்பு அடைவது உறுதி

இந்தப் பத்து சூப்பர் உணவுகளில் முட்டை இடம் பெறாதது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவைசத்தில் மீனும் கோழிக்கறி மட்டும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.



மேற்கண்ட பத்து உணவுகளையும் உங்கள் உணவுத்திட்டத்தில் இடம் பெறச்செய்தால் சுறுசுறுப்புடன் செயல்படுவதோடு செயல் ஊக்கமுள்ள மனிதராக ஆகி ஒவ்வொரு நாளையும் இன்முகத்துடன் வரவேற்று வாழலாம். காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்.


1.வெள்ளைப் பூண்டு: தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.


2.வெங்காயம்:வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.


3.காரட்:நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.


4.ஆரஞ்சு :வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.


5.பருப்பு வகைகள் :பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.


6.கோதுமை ரொட்டி :நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


7.இறால் மீன் மற்றும் நண்டு :அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.



8.தேநீர் :தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.


9.பாலாடைக்கட்டி :சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.


10.முட்டைக்கோஸ் , Broccoli :குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.
மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.


No comments:

Post a Comment