Thursday, October 7, 2010

பஞ்ச கோசங்கள்

கோயிலுக்குச் செல்கிறபோது இறைவனின் அருளை வேண்டுகிறோம். அங்குள்ள சிற்பங்களின் அழகில் மயங்குகிறோம். ஆனால் ஆலய அமைப்பு முறையில் ஓர் அற்புதமான தத்துவம் இருப்பதை எல்லோரும் அறிவதில்லை.


கடவுளை மட்டுமல்ல, அவன் உறையும் கோயிலைக் கூட மனிதனைப் போலவே அமைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். .


'

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'



என்பது திருமூலர் அருட்பாடல்.

அவர் உடலே கோயில் என்றார். உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது என்பதை 'க்ஷத்திரம் சரீரப் பிரஸ்தாரம்' என்கிறது ஆகமச் சொற்றொடர்.

உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும், முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும், தொடை நிருத்த மண்டபமாகவும், கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும், மார்பு மகாமண்டபமாகவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.

கோயில் அமைப்பில், உடலில் அன்னமய கோசம், பிரணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசம் ஆகிய ஐந்து உள்ளது போல கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

தூல சரீரம், சூட்சும சரீரம், குண சரீரம், அஞ்சுக சரீரம், காரண சரீரம் போல ஐந்து சபைகள் உள்ளன.

உடலில் உள்ள மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்கள் போலக் கருவறை, அர்த்த மண்டபம் முதலான ஆறு நிலைகள் உள்ளன.

கருவறை சிரமெனப்பட்டது. அதில் வலச்செவி தட்சிணாமூர்த்தி, −டச்செவி சண்டிகேசுவரர், புருவமத்தி லிங்கம், மூக்கு ஸ்தபந மண்டபம், வாய் ஸ்தபந மண்டப வாசல், கழுத்து நந்தி தலையின் உச்சி விமானம் என்று ஆகம சாத்திரம் தெரிவிக்கிறது.

ஆகம விதிப்படி ஆலயங்கள் கருவறை, ஒன்று முதல் ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம், பலி பீடம், கொடிமரம், யாகசாலை, நந்தி முதலியவற்றுடன் விளங்கும்.

மேலும் நம் உடல் தோல், இரத்தம், நரம்பு போன்ற ஏழு வகை தாதுக்களால் ஆனது போல் ஆலயமும் செங்கல், காரை, கல், போன்ற ஏழு வகையான பொருள்களால் ஆனது என்கிறது


பஞ்ச கோசங்கள்: ஆத்மாவை சுத்தி 5 உறைகள் இருக்கு. இவை ஒண்ணுக்குள் ஒண்ணு இருக்கும். அதாவது மேலும் மேலும் சூக்குமமா இருக்கும் - ஒன்றுக்குள் ஒன்று உறைகின்றன. சரியா?

அன்னமய கோசம் - எது சாப்பாட்டால வளக்கப்பட்டதோ அந்த உடம்பு. சாப்பாடு இல்லைனா அழிஞ்சும் போயிடும். இது கண்ணுக்கு தெரியுது. இதுக்கும் உள்ளே...

உயிரின் இயக்கத்திற்கு உதவிவருவது இந்த மனிதசரீரமாகும். இந்த சரீரத்தின் வளச்சிக்கும், உயர்ச்சிக்கும் உயிரானது தீவிரமாக அன்னமயகோசத்தில் நின்றே ஈடுபாடு காட்டும் வசதி குறைந்தவர்களின் உயிரானது உணவைத் தேடுவதிலும், ஓவ்வு நேரத்தில் உறங்குவதிலும் கூடுதலாக ஈடுபாடு கொண்டிருக்கும். அவற்றுக்காகவே அவர்கள் கடுமையாக உழகை;கவேண்டியிருப்பதால் வேறு சிந்தனைகளில் மனத்தைச் செலுத்துவதற்கு அவர்களுக்கு மனம் விருப்பப்படாது. அவர்களுக்கு நேரமும் இருக்காது.

பிராண மய கோசம் - ..

இது அன்னமய கோசத்தைவிடச் சற்று சிறப்பானதாகும். இது உயிர் பிராணமய கோசத்தில் இயங்கும் நிலையாகும். மூச்சு என்ற இந்த இயக்கம் நின்றுவிட்டால் பிராணன் என்றழைக்கப்படும் உயிரும் இல்லையென்றாகிவிடும். இதனால் மூச்சுக் காற்றையும், உயிரையும் முன்னோர்கள் பிராணன் என்று அழைத்தனர். கடுமையான உழைப்பாளிகளுக்கு மூச்சின் இயக்கம் செம்மைப்படுத்தப்பட்டு உடலுக்கு உரம் சேர்க்கிறது. பிராணன் மிகுதியாக உயிரினுள் செயற்படும்போது உடல் தானாகவே பலமடைகின்றது. ஒரு பொருளைத் தூக்க முயற்சிக்கும் ஒருவர் இயலாத கட்டத்தில் மூச்சைப்பிடித்துத் தூக்கி விடுகின்றார். எனவே பிராணன் உயிருக்குள் இருக்கும்போது உடல் வலிமைபெறுகின்றது. உடலுழைப்பு அதிகம் இல்லாதவர்களும், சோம்பல் மிகுதியாக உள்ளவர்களும் மூச்சுப் பயிற்சி செய்வதனூடாக உடலின் கர்மேந்திரியங்களை வலுப்பெறச் செய்யலாம். உடலின் செயலாற்றலை அதிகரித்துக் கொள்ள விரும்பும் ஒருவருக்கு உயிரானது பிராணமய கோசத்தில் நின்று இயங்கி அவருக்கு உதவுகின்றது.

ஐந்து பிராணங்கள் உலவுகிற உறை. பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் ன்னு 5. இதெல்லாம் என்ன செய்யுது எல்லாம் விளக்கமா அப்புறம் பாக்கலாம். இப்ப சுருக்கமா.

இந்த வாயுக்கள்ன்னா ஏதோ கெமிஸ்ட்ரி லாபிலே இருக்கிற தயாரிக்கிற வாயுக்கள் இல்லை. சக்திகள். அவை உலாவும் என்கிறதால வாயுன்னு சொல்லி புரிய வைக்கிறோம்.


ப்ராணன் உடம்புக்குள் வெளி காத்தை இழுக்கிற சக்தி.


அபானன் உள்ளேந்து காத்து, மலம், சிறு நீர் இதையெல்லாம் வெளியே தள்ளுகிற சக்தி.


வ்யானன் - காத்தை உடம்பிலே நிறுத்தி வைச்சு பலம் தருகிற சக்தி. ஏதோ ஒரு பெரிய எடையை தூக்கறோம். அப்ப என்ன செய்யறோம்? மூச்சை பிடிச்சுக்கொண்டு தூக்கறோம். இது வ்யானனோட வேலை.
உதானன் தொண்டயிலே இருந்து கொண்டு பேசறதுக்கு உதவறது.
சமானன் வயித்தில் இருந்து கொண்டு சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாக உதவுகிற சக்தி.
இதை பத்தி இன்னும் மேலே அப்புறமா பாக்க போறோம்.

மனோ மய கோசம் - மனசு என்கிற உறை.


இந்த நிலையில் நின்று இயங்கும் உயிரின் இயக்கமானது மிகவும் சிறப்பானதாகும். மனமும் இந்திரியங்கள் என்றழைக்கப்படும் புலன்கருவிகளும் சேர்ந்த இயக்கமே மனோமய கோசம் எனப்படும். மனம் நினைக்கும் எண்ணங்களை விருத்தியாக்கி வலிமை சேர்ப்பதற்கு நல்லறிவுகளை மனத்திற்குக் கொண்டுவந்து சேர்ப்பவை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்துமாகும். உயிர் இந்தக் கோசத்தில் நின்று செயற்படும்போது எண்ணங்களே வலிமைப்படுத்தப்படுகின்றது. இதில் ஒன்றின் பிணைப்பிலேயே (பரமாத்தா) உயிர் கலந்து ஒன்றும்போது மற்றவை தானாகக் குறையத் தொடங்கிவிடும்.



விஞ்ஞான மய கோசம் - புத்தி - உறுதி இப்படி செய்யணும் என்கிற சங்கல்பம், இந்த மாதிரி சித்த விருத்திகள்.

விஞ்ஞானம் என்றால் ஒருவித சிறப்பு நிலையான ஞான நிலையாகும். இந்தக் கோசத்தில் உயிர் செயற்படுமு;போது புத்தியானது மிகவும் கூர்மை அடைந்து வலுப்பெறுகின்றது. புத்தியானது முடிவுகளை ஆராய்ந்து எடுக்கும் வலிமை பெற்றது. ஆராச்சிகளில் கடுமையாக ஈடுபடும் ஒருவர் உலகை மறந்த நிலையில் தன் ஆய்வுகளில் கவனமாக இருப்பாரே அன்றி உலக விடையங்களில் அவருக்கு அதிக நாட்டம் இருக்காது. வரலாற்றில் பல மேதைகள் விஞ்ஞானமய கோசத்தில் நின்று பல விடையங்களை உலகிற்கு அளித்துள்ளார்கள். அறிவின் செயற்பாட்டுடன் உயிர் இரண்டறக் கலந்து இந்தக் கோசத்தை ஆளுமை செய்கின்றது. இதில் புத்தியின் கூர்மை அதிகமாகத் தென்படும்.


ஆனந்த மய கோசம் - உலக ஆனந்தங்களோட வெவ்வேறு நிலைகள் இருக்கிற உறை.


சரீரங்கள் மூணு. ஸ்தூல சரீரம், சூக்ஷ்ம சரீரம். காரண சரீரம்.
ஸ்தூல சரீரம் என்கிற நாம் பாக்கக்கூடிய உடல்.
சூக்ஷ்ம சரீரம் பாக்க முடியாதது. Astral body. 5 கர்ம புலன்கள், 5 ஞான புலன்கள், 5 பிராணன்கள், அந்தக்கரணம். இதை எல்லாம் சேத்தது.
காரண சரீரம் எது நாம் திருப்பி பிறவி எடுக்க காரணமா இருக்கோ அதுதான் காரண சரீரம். இது - சுசுப்தியிலே - கனவில்லா ஆழ் தூக்கத்திலே- இருக்கிறது. ஆணவம் கன்மம் மாயை அப்படின்னும் சொல்லுவாங்க. இதில ஆணவம் நான் என்கிற நினைப்பு; கன்மம் நம்மோட கர்ம பலன்கள் என்கிற மூட்டை; மாயை தெரிஞ்சதுதானே?


ஆனந்தமய கோசத்தில் உயிர் நிற்கும்போதுதான் அது இன்பத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றுக் கொள்கின்றது. நிலையான இன்பம் ஏற்படுவதற்கான வழியில் நின்று பரம்பொருளைக் கண்டு அனுபவிக்கும் பேரின்ப நிலையே இதுவாகும். இதனையே ஐம்புலன்களும் அடங்கிய நிலை என்று கூறுகின்றனர் ஒவ்வொரு உயிர்களும் அடைய வேண்டிய உயர்ந்த நிலையும் இதுதான். இதனை வழிநடத்துவதற்காகவே பஞ்சகோச இயக்கங்கள் அமைந்துள்ளன. இதனை உணர்ந்து நடக்கும்போது உலகியல் சார்ந்த துன்பங்கள் எல்லாம் நீங்கிவிடுகின்றன. மனம் மாசு அற்ற தௌpந்த நிலை என்றும் இதனை குறிப்பிடுவர்.

மனத்தைப் பக்குவப்படுத்தி மனத்தினூடாகவே இந்த வாழ்க்கையில் ஆனந்தத்தைப்பெற முடியும். இந்த ஆனந்த வாழ்வைப் பெறுவதற்கு ஒரே பரம்பொருளில் மனத்தை ஒருமுகப்படுத்துவதே சிறந்த வழியாகும். இப்படி மனத்தை குவித்து ஒருமுகப்படுத்த உதவுவது ஆழ்ந்த தியானமாகும். தியானம் மனத்தைத் தூய்மையாக்கி ஆனந்தமான நித்திய நிலைக்கு உயிர்களை உயர்த்துகிறது இதைப்போல் ஆழ்ந்த தியானமானது விஞ்ஞானமய கோசத்தில் நின்று புத்தியை வலுப்படுத்தி உலக விவகாரங்களில் வெற்றியைத் தருகின்றது.


பரப்பிரம்மத்திலேந்து பிரிஞ்ச சத்துவம் ஈசன் ன்னு பாத்தோம். இந்த பிரபஞ்சம் மாயைன்னு புரிஞ்சதால இது ஈசனோட சுழுத்தி நிலை. உலகம் தோன்ற காரணமா இருக்கிறதால காரண சரீரம். வெளியே ஈசனா இருந்து கொண்டு உள்ளே தான் பிரம்மத்திலேயே லயிச்சு இருக்கிறதால ஆனந்த மய கோசம்.
அது எப்படி வெளியே ஈசன், உள்ளே பிரம்மம்ன்னா...

சினிமா பாக்கிறோம். இது உண்மையில்லை சினிமாதான் ன்னு தெரிஞ்சு கொண்டு அப்போவும் அதை ரசிச்சு பாக்கலாம். இல்லை அதோட ஒன்றிப்போய் அதிலே வர சுக துக்கங்களோட நாமும் சுகப்பட்டு துக்கப்பட்டு... புரியுது இல்லையா? ஈசனுக்கு உள்ளுக்குள்ளே - தான் பிரம்மம்ன்னு தெரியும். நமக்கு தெரியாது.

அடுத்து பரப்பிரம்மத்திலேந்து வருகிறது ராஜச குணம். இதுக்கு அவித்தை, அசுத்த மாயை, அஞ்ஞானம் அப்படி எல்லாம் பேர் உண்டு. இதுல பிரதி பலிக்கிற பிரம்மத்தின் சாயை எப்படி பரிணாமம் ஆகுதுன்னா இந்த கணக்கில்லாத சீவர்களா ஆகும். இந்த சீவர்களுக்கு பிரஞ்ஞானன் ன்னு பெயர்.

ஈசனுக் கிது சுழுத்தி யிதுவே காரண சரீரம்
கோசமா னந்தமாகுங் குணமிரா சதம வித்தை
தேசறு மவித்தை தோறுஞ் சிற்சாயை சீவகோடி
நாசமா முயிர்க்கப் போது நாமமும் பிராஞ்ஞனாமே

ஈசனுக்கு இது (இந்த சுத்த மாயையே) சுழுத்தி. இதுவே காரண சரீரம்; ஆனந்த மய கோசம் ஆகும்.


இரண்டாம் குணம் இராசதம் (ராஜஸம்). [அவித்தை, அசுத்த மாயை, அஞ்ஞானம் எனவும் பெயர்கள் உண்டு]. தேசறு (விளக்கமில்லாத) அவித்தை தோறும் (பிரதிபலித்த) சிற்சாயை (சித்தின் நிழல்) சீவகோடி(சீவன்). நாசமாகும் இந்த சீவ உயிர்க்கு அப்போது நாமமும் (பெயரும்) பிராஞ்ஞனாமே. (பிரஞ்ஞானன் ஆகும்).

3 comments:

  1. வணக்கங்க சாமி, மிகவும் அற்புதமான பதிவுகள் 👍

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா
    புரியும் வகையில் எழுதி உள்ளீர்கள்
    இவண்
    அரசு யோகா &இயற்க்கை மருத்துவர் ஈரோடு 9095062158

    ReplyDelete