Tuesday, October 19, 2010

ஸ்டெம் செல்













ஸ்டெம் செல் பயன்பாட்டை அறிந்த பிறகு மருத்துவத்துறையில் புரட்சி ஏற்பட்டது எனலாம். ஸ்டெம் செல் எனப்படுவது உறுப்புகளின் அடிப்படை தோற்றுவாய் செல்லாகும். குழந்தையின் தொப்புள் கொடியில் இருக்கும் ஸ்டெம்செல் உடலின் எந்த ஒரு உறுப்பையும் மறுஉற்பத்தி செய்யத் தகுதி உடைய முழுமையான அடிப்படை செல்லாகும்.

இதேபோல் உடலின் மற்ற பாகங்களிலும் `ஸ்டெம்செல்’கள் உள்ளன. ஆனால் அவை குறிப்பிட்ட பணியில் மட்டுமே ஈடுபடும். இந்த இரண்டாம் தர `ஸ்டெம்செல்’களும் பலவித நோய்களை தீர்க்க வல்லது.

தற்போது இந்த ஸ்டெம் செல்களை எளிதாக தானம் செய்ய முடியும் என்று தெரிய வந்துள்ளது. ரத்தத் தட்டுகளைச் சுற்றி இருக்கும் ஒரு வகை ஸ்டெம் செல்கள் பி.பி.எஸ்.சி. எனப்படுகிறது. இவற்றை ரத்தத்தில் இருந்து தனியாகப் பிரிக்கும் முறையை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஸ்டெம் செல் மூலம் ரத்தப்புற்று நோயான லுக்கேமியா மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட சில கொடிய வியாதிகளை குணப்படுத்தலாம் என்று தெரிகிறது.

இந்த வகை ரத்த ஸ்டெம்செல்களை சாதாரணமாக ரத்ததானம் போலவே தானம் செய்ய முடியும். இதற்கான ஒரு சில சோதனைகளுக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் ஸ்டெம்செல் தானம் செய்யலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


ஸ்டெம் செல் மருத்துவம் - டாக்டர் சாந்தி Ph.D.

நம்மைச் சுற்றியுள்ள எல்லா உயிரினங்களிலும் உயிர் உள்ளது என்பதை நாம் மறுப்பதில்லை. உயிர் என்பது என்ன என யோசிப்போமேயானால், விஞ்ஞானபூர்வமான பதில் உயிரணுக்களின் இயக்கம் என்பதுதான். எல்லா உயிரினங்களிலும் உயிர் அணுக்கள் உண்டு. ஆங்கிலத்தில் செல் (Cell) எனும் சொல் உயிரணுவைக் குறிக்கும். மனிதர்களின் உடலில் எலும்பு மஜ்ஜையில் (Bone Marrow)ல் தான் அதிகமாக ஸ்டெம் செல் எனும் அடிப்படை செல் காணப்படும். ஸ்டெம் செல்கள் இந்த நூற்றாண்டின் உன்னதமான கண்டுபிடிப்பு எனச் சொல்லலாம். ஏனெனில் தீர்க்க முடியாது எனக் குறிப்பிட்டு, மருந்து மாத்திரைகளை நம்பியே மருத்துவம் செய்துகொண்டு வரும் நோயாளிகளுக்கு ஸ்டெம் செல்களின் கண்டுபிடிப்பு ஒரு வரப்பிரசாதம்தான். ஸ்டெம் செல்களால் தீர்க்க முடியாத புற்றுநோய், இருதயக் கோளாறு, பார்கின்சன்ஸ், அல்சமீர், சர்க்கரை வியாதி என பலவகையான நோய்களுக்கு அருமருந்தாக வந்துள்ளது. மாத்திரை, அறுவை சிகிச்சை இல்லாமல் இனி நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக மனிதனை வாழவைக்க இவ்வகை ஸ்டெம் செல்கள் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஸ்டெம் செல் என்றால் என்ன?

தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் குரோமோசோம் எனும் அணுக்களைப் பெற்று குழந்தை உருவாகிறது. குழந்தை உருவாகும்போதே இரத்த செல்கள் உருவாக ஆரம்பிக்கின்றன. ஸ்டெம் செல்கள், இரத்த செல்களில் இருக்கும்.

ஸ்டெம் செல் எங்கு இருக்கும்?

பொதுவாகக் குழந்தை பிறக்கும்போது தாயுடன் பிணைக்கப்பட்டிருக்கும் நஞ்சுக் கொடி (umbilical cord blood)-யில் உள்ள இரத்தத்தில் ஸ்டெம் செல்கள் அதிகம் இருக்கும். எலும்பு மஜ்ஜை (Bone Marrow)யிலும், மனிதர்களின் அடிவயிற்றில் கொழுப்பு திசுக்கள் சுற்றியும் இருக்கும். இரத்தத்திலும் முதுகெலும்பு தண்டு வடத்திலும் கூட சிறிய அளவில் இருக்கும்.

எப்பொழுது, யாரால் கண்டறியப்பட்டது?

பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ஸ்டெம் செல்களின் உபயோகம் பற்றி ஆராய்ச்சியாளர்கள் தியோடர் போவாரி, வாலண்னெ, ஹேக்கர் இருவரும் நுண்ணுயிர் பிரிவு (germline) என ஸ்டெம் செல்லைக் குறிப்பிட்டனர். ஆனால் ஆர்தர் பேப்பன் ஹேம், அலெக்சாண்டர் மேக்சிமோ, எர்நெஸ்ட் நியூமேன் ஆகியோர் இரத்தத்தின் ஒரு பிரிவு என ஸ்டெம் செல்லைக் குறிப்பிட்டனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ஸ்டெம் செல்களின் உபயோகம் பற்றி ஆராய்ச்சி ஆரம்பம் ஆனது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தியோடர் போவரி, வாலண்டின் ஹேக்கர் இருவரும் நுண்ணுயிர் பிரிவு (germline) என ஸ்டெம் செல்லைக் குறிப்பிட்டனர். ஆனால் ஆர்தர் பேப்பன் ஹேம், அலெக்சாண்டர் மேக்கிமோ, எர்நெஸ்ட் நியூமேன் ஆகியோர் இரத்தத்தின் ஒரு பிரிவு என ஸ்டெம் செல்லைக் குறிப்பிட்டனர்.

முதன் முதலில் 1868ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த உயிரியல் ஆராய்ச்சியாளர் எர் நெஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel)யின் விஞ்ஞான ஆராய்ச்சிக் கட்டுரையில் ஸ்டெம் செல்லைப் பற்றி எழுதியிருந்தார். டார்வின் தியரியில் மிகவும் ஈடுபாடு கொண்ட எர்நெஸ்ட், மனித சந்ததியில் வரும் ஜீன் (Gene)க்கு ஒரு வரைபடம் அமைத்தார். ஒரு செல்லிலிருந்து, அதிகமாக பெருகக்கூடிய செல்களுக்கு 'ஸ்டெம் செல்' எனப் பெயரிட்டார். அவர் 1877இல் எழுதிய ஆந்த்ரோபோஜெனி (Anthropogenie)ல் கரு முட்டைகளை (Fertilized egg) ஸ்டெம் செல் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


1885இல் வெய்ஸ்மேன் எனும் ஆராய்ச்சியாளரின் கட்டுரையில் (Germ-Plasm) எனும் நுண்ணுயிர் நிறமில்லாத திரவத்தையும் 'ஸ்டெம் செல்' எனக் குறிப்பிட்டார். இவ்வகையான 'ஸ்டெம்செல்' வழிவழியாக ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததியினருக்குச் செல்கிறது. இவ்வாறான செல்களைக் கரு உதிக்கும்போதே தனித்தனியாகப் பிரித்து எடுப்பதைப் பற்றி எழுதி வைத்துள்ளார். வெய்ஸ்மெனின் கருத்தால் (கண்டுபிடிப்பால்?) கவரப்பட்டு தியோடர் போவெரி, வாலன்டைன் ஹாக்கெர் எனும் இரு ஆராய்ச்சியாளர்கள், மிருகங்களுக்குக் கரு உருவானதும் அதனிலிருந்து, முதன் முதலாய் உதிக்கும் நுண்ணுயிர் எது எனக் கண்டறியும் ஆராய்ச்சியை ஆரம்பித்தனர். காரணம் அந்த நுண்ணுயிர்தான் வம்சாவளி (lineage)யைத் தீர்மானிக்கக் கூடியது என நம்பினர்.

1992இல் போவரி எனும் ஆராய்ச்சியாளர் அஸ்காரிஸ் (Ascaris) எனும் புழுக்களின் வம்சாவளி செல்களைக் கண்டுபிடித்து அதற்கு ஒரு வம்ச மரம் (Family Tree) வடிவமைத்தார். அவை ஒரே மாதிரி இல்லாமலும் குரோமேடின் இல்லாமல் இருப்பதையும் கண்டறிந்தார். போவரி குரோமேடின் செல்கள் இருந்ததால்தான் வம்சத்திற்கு ஒரே மாதிரியான வடிவமைப்பை வழங்கும் எனும் முடிவை அறிவித்தார். ஹேக்கும் 1892இல் செல்கள் எப்படி மாறி, நுண்ணுயிர் செல்களாகவும் இரத்த அணுக்களாகவும் மாறுகின்றன எனத் தெரிவித்தார்.

எட்மண்ட் டீ. வில்சன் என்பவர் 'The all in Development and Inheritance' என்னும் புத்தகத்தை 1896ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் எழுதினார். அதில் போவெரி, ஹாக்கர்ஸ் எனும் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பைப் பற்றி விமரிசனம் செய்து எழுதியிருந்தார். அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்களை இப்புத்தகம் மிகவம் கவர்ந்தது. எட்மண்ட் டீ.வில்சனால் இவ்வாராய்ச்சி எல்லோராலும் படித்து பாராட்டப்பட்டது. ஸ்டெம்செல் எனும் சொல் வில்சனால்தான் மிகவும் பிரபல்யமாயிற்று. போவெரி, ஹாக்கர் போன்ற விஞ்ஞானிகள் எவ்வாறு தாய் உயிரணுக்களை, மரபணு எனக் கருதி ஆராய்ச்சி மேற்கொண்டனரோ அதன் அடிப்படையிலேயே வில்சனும் ஆராய்ச்சி மேற்கொண்டார்.

அதே சமயத்தில் இரத்ததிலுள்ள அணுக்கள் தானாகவே அதிகரித்து, புதுப்பித்துக் கொள்வதைக் கண்ட ஆராய்ச்சியாளர்கள் வேறு வகையில் செல்கள் இரத்தத்தில் செயல்படுகின்றன என நினைத்தனர். பால் எர்லிச் (Paul Ehrlich) என்பவரின் ஆராய்ச்சியால் வெள்ளை அணுக்களும், எலும்பு மஞ்ஞையில் உள்ள ஸ்டெம்செல்களும் வெவ்வேறு அல்ல எனக் கண்டறிந்தார். 1868இல் நியூமேன் (Newman), எலும்பினுள் (Bone Marrow) தான் ஸ்டெம் செல் அதிகம் உள்ளது என்றறிந்தார். 1909இல் மாக்சிமோ, இரத்த அணுக்களில் உள்ள ஸ்டெம் செல்களைப் பற்றி அதிகம் குறிப்பிட்டுள்ளார். மெரிஸ்டெம் (Meristem) எனும் சொல் தாவர வகைச் செல்களை குறிப்பதாகும். தானாகவே பிரிந்துக்கொள்ளும் தாவர செல்கள்தான் அவை. மனித உடலில் காணப்படும் ஸ்டெம் செல்லுக்கும் தாவர மெரிஸ்டெம்மிற்கும் தொடர்பு உண்டு எனப் பலர் நினைப்பார்கள். இரண்டும் ஒரே மாதிரியான செயல்பாடுகளை உடையதுதான். ஆனால் மெரிஸ்டெம் தாவர சம்மந்தப்பட்டது. ஸ்டெம் செல் மனித இன சம்பந்தப்பட்ட செல்களாகும்.

1963இல் பெக்கர் என்பவரும், 1961இல் டில்(Till)எனும் ஆராய்ச்சியாளர்களும், 'ஸ்டெம் செல்' என்பது ஒரு மூலப் பொருள் (Prototypical Stem Cells) என உறுதிபட தெரிவித்தனர். இவ்வகையான ஸ்டெம் செல்கள் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளவும், தனிப்படுத்திக் கொள்ளவும் இயலும் என நிரூபித்தனர். இதன் அடிப்படையில் நரம்பு மண்டலத்திலும், குடலிலும், தோலிலும் உள்ள திசுக்களில் உள்ள ஸ்டெம் செல்களைக் கண்டறிய முடிந்தது. எனவே முன்னதாக, நுண்ணுயிர் (germ cell) என்பதைக் குறிக்க 'ஸ்டெம்செல்' எனும் சொல்லானது பயன்படுத்தப்பட்டு வந்த வழக்கம் நின்று போனது. எவ்வாறு குறிப்பிட்டாலும் முதன் முதலில் உருவாகும் கரு (Embryo)வில் தான் ஸ்டெம் செல்களின் ஆதாரம் உள்ளது என மேட்சூயி, ஸவாகா என்பவரும் 2005இல் குறிப்பிட்டுள்ளனர்.


ஆலன் கோல்மேன் இங்கிலாந்தில் 'குளோனிங்' முறையில் 'டாலி' எனும் ஆடு ஒன்றை விஞ்ஞான பூர்வமாகச் செயற்கை முறையில் உருவாக்கினார். அமெரிக்காவில் ஆராய்ச்சி மேற்கொண்டாலும் பாரம்பரிய (Ethics) கோட்பாடுகளை மீறுவதாக எதிர்ப்பு அதிகமாக உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போதும் 'குளோனிங்' 'ஸ்டெம் செல்' போன்ற புதுக் கண்டுபிடிப்புகளுக்கு எதிராகவும், சார்ந்தும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட ஜார்ஜ் புஷ்ஷூக்கும், ஜான் கெர்க்கும் இடையே சர்ச்சை நடந்தது. ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் சிங்கப்பூரிலும், சீனாவிலும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்து ஆராய்ச்சியை ஊக்குவித்து வருகின்றனர். இந்தியாவிலும் அதிக அளவில் ஸ்டெம்செல் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் 'ஸ்டெம் செல்' ஆய்வின் வளர்ச்சி:

சிங்கப்பூரில் 200 எக்டேர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் ஆராய்ச்சிக் கூடம் நிறுவப்பட்டுள்ளது. அறிவியல் பூங்கா 'ஒன் நார்த்' ('One North') 'பயோபோலிஸ்' எனும் சென்டரில் 54 விதமான நோய்களுக்கு வேண்டிய ஆராய்ச்சி செய்ய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. சிங்கப்பூருக்கு உலக நாடுகளில் இருந்து ஆராய்ச்சியில் ஈடுபட ஆர்வமுள்ள விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் வந்த வண்ணம் உள்ளனர். அமெரிக்க நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பிரென்னர் 'பயோபோலிஸ்'இல் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். செயற்கை முறையில் 'டாலி' ஆட்டை உருவாக்கிய இங்கிலாந்து புகழ் ஆலன் கோல்மனின் மேற்பார்வையில் பணியாற்றிய நோவர்டிஸ், எல்லி லில்லி போன்றவர்கள் கூட சிங்கப்பூரின் பயோ போலீஸ்ஸில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிங்கப்பூருக்கு அடுத்தப்படி சீன அரசு 29.4. பில்லியன் டாலர் அளவிற்கு நிதியை 2010 வரை ல்டெம்செல் ஆய்விற்குச் செலவிட வழங்கியுள்ளது.

சீன அரசு தொலைநோக்குப் பார்வையில் 'ஸ்டெம் செல்' ஆய்வை மூலக்கூறு மாற்று ஆய்வு (genetically modified) மூலம் கால்நடைகள், பயிர்கள் எனப் பல விஷயங்களில் புகுத்திச் சாதனை படைக்கிறது. சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு உலகின் பல்வேறு பகுதியிலிருந்து சீன விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்தபடி உள்ளனர். அரிசி, பட்டுப்பூச்சி, கோழியினங்கள், வெண்பன்றி போன்றவற்றில் ஜீன்களை (மூலக்கூறு) அதிக அளவில் பெருக்கி சீனா, அமெரிக்காவையும், ஜப்பானையும் ஆய்வில் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

அமெரிக்க நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஹெல்த் (NIH)இல் பணியாற்றி, ஸ்டெம் செல் ஆய்வு சீனாவில் மேற்கொள்ள ஷெங் ஹீய்ஹன் (Sheng Hulxhen) திரும்பி உள்ளார். அவருக்கு சீன ஷாய்கய் அரசு 875,000 டாலர் வழங்கி ஆய்வுக்கூடம் நிறுவ உதவி உள்ளது.

இந்தியாவிலும் அதிக அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கர்நாடகத்தில், பெங்களுரில் உள்ள பயோகான் (Biocon) இந்தியாவின் பெரிய விஞ்ஞான வாணிபக் கழகம், மாத்திரை வடிவில் இன்சுலின் (சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு ஊசி மூலம் தரப்படும் மருந்து) தயாரிப்பது போன்ற நவீன முறையில் ஆய்வை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில், சென்னையில் உள்ள 'லைப் செல்' எனும் நிறுவனத்துடன் சனாரான் (Saneron) எனும் அமெரிக்க கம்பெனி கூட்டாகச் சேர்ந்து 'ஸ்டெம்செல்' குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இலங்கையில் பிறந்த ஆரிப் பாங்சோ (Arift Bongso) எனும் கரு ஆராய்ச்சியாளர்தான் உலகில் முதன் முதலில் 1994இல் மனிதனின் கருவிலிருந்து ஸ்டெம் செல்லைத் தனியாக பிரித்தவர். டெஸ்ட்டியூப் பேபி எனும் செயற்கை கருத்தரிப்பின் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது ஸ்டெம் செல்களைப் பிரித்து உலகிற்கு வெளியிடும் தறுவாயில், அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் தாம்சன் ஸ்டெம்செல் பற்றிய கண்டுபிடிப்பைப் புத்தகமாக வெளியிட்டு ஆரிப் பாங்சோவை முந்திக் கொண்டார். எனினும் ஆரிப்பின் முயற்சிதான் ஸ்டெம் செல்லின் முக்கியத்துவத்தை இன்றளவும் உலகிற்கு உணர்த்திக் கொண்டுள்ளது.


ஸ்டெம் செல்களின் வகைகள்:

இரத்த செல்களில் உள்ள ஸ்டெம் செல் மூன்று வகைப்படும்:

1. எம்ப்ரியோ (Embryo): ஒவ்வொரு ஸ்டெம் செல்லிலும் முட்டைக் கருவுயிர் இருக்கும். அதுதான் எம்ப்ரியோ எனப்படும். இதை வைத்துதான் 'குளோனிங்' எனும் முறையில் அச்சாக மறுபதிப்பு போல் உயிரினங்களை உருவாக்கினார். 'டாலி' எனும் செயற்கை ஆட்டை உதாரணமாகக் கொள்ளலாம்.

2. பளுரி பொடன்ட் ஸ்டெம் செல் (Pleuripotent stem cell): இவ்வகை ஸ்டெம் செல்தான் மருத்துவத் துறையில் தேவைப்படும் மிகவும் முக்கியமான செல். திசுவாகவோ, தசையாகவோ இந்த செல்கள் உருமாறும். காயம்பட்ட, பாதிக்கப்பட்ட, பலவீனப்பட்ட உறுப்புகளில் இந்தச் செல்களை ஊசி மருந்து மூலம் செலுத்தினால் அந்த உறுப்புகளாக உருப்பெற்று சரி செய்துவிடும்.



இரத்த செல்களில் உள்ள ஸ்டெம் செல் மூன்று வகைப்படும்:

1. எம்ப்ரியோ (Embryo): ஒவ்வொரு ஸ்டெம் செல்லிலும் முட்டைக் கருவுயிர் இருக்கும். அதுதான் எம்ப்ரியோ எனப்படும். இதை வைத்துதான் 'குளோனிங்' எனும் முறையில் அச்சாக மறுபதிப்பு போல் உயிரினங்களை உருவாக்கினார். 'டாலி' எனும் செயற்கை ஆட்டை உதாரணமாகக் கொள்ளலாம்.

2. பளுரி பொடன்ட் ஸ்டெம் செல் (Pleuripotent stem cell): இவ்வகை ஸ்டெம் செல்தான் மருத்துவத் துறையில் தேவைப்படும் மிகவும் முக்கியமான செல். திசுவாகவோ, தசையாகவோ இந்த செல்கள் உருமாறும். காயம்பட்ட, பாதிக்கப்பட்ட, பலவீனப்பட்ட உறுப்புகளில் இந்தச் செல்களை ஊசி மருந்து மூலம் செலுத்தினால் அந்த உறுப்புகளாக உருப்பெற்று சரி செய்துவிடும்.

3. மல்டி பொடன்ட் ஸ்டெம் செல் (Multi Potent stem cell) இதுவும் மருத்துவ சிகிச்சைகளும் மிகவும் முக்கியமானது. உடலின் எந்த உறுப்பையும் மறு புனரைமைப்பு செய்ய இந்த ஸ்டெம் செல்கள் பயன்படும்.

ஸ்டெம் செல்கள் எத்தனை வகையில் எடுக்க முடியும்? எவ்வாறு ஸ்டெம் செல்களை எடுக்க (அ) பிரிக்க முடியும்? எப்படி கிடைக்கும்?
ஸ்டெம் செல்கள் தான் முதல் அல்லது ஆதி செல் எனலாம். இதனின்றுதான் எல்லா எதிர்ப்புச் சக்தி தரும் இரத்த அணுக்கள் உருவாகக் காரணமாயுள்ளது. ஸ்டெம் செல்லில் வெள்ளை அணுக்கள் (white blood corpuscles), சிவப்பு அணுக்கள் (Red Blood Corpuscles) மற்றும் பிளாடிலெட்ஸ் (Platelets) என்பதும் நிறைந்து காணப்படும். இதில் வெள்ளை அணுக்கள், நோயை உருவாக்கும் கிருமியை அழிக்கும் சக்தி பெற்றது. சிவப்பு அணுக்கள்தான் உடலுக்கு தேவையான பிராணவாயுவைக் (Oxygen) கொண்டு செல்கிறது. பிளாட்டிலட்ஸ் எனும் நிறமற்ற அணு இரத்தம் உறையவும், உடலில் இயற்கையான நோய் எதிர்க்கும் சக்தியையும் தருகிறது. இவ்வளவு முக்கியமான அணுக்கள் அடங்கிய 'ஸ்டெம் செல்'களை நாம் மூன்று வழிகளில் பெறலாம்.

1. கருக்கள் மூலம் (Embryonic)
2. ஆட்டோலோகஸ் (Autologous)
3. தொப்புள் கொடி மூலம் (Umbilical cord)

கருக்கள் மூலம் (Embryonic): மனிதனின் முட்டைக் கருவுயிர் (Nevelevs)ல் ஸ்டெம் செல் உள்ளது. இதுதான் பரம்பரை குணாதிசியங்களையும், சாயலையும் தரும். இவ்வகை செல்களை வைத்து ஒரே மாதிரியான மனிதர்களை உருவாக்க முடியும்.

ஆட்டோலோகஸ் (Autologous): மனிதனின் எலும்பு மஞ்ஞையில் (Bone Marrow) காணப்படும் ஸ்டெம் செல்கள்தான் இரத்த அணுக்கள் உருவாகக் காரணம். அவைகளை வைத்துப் பாதிக்கப்பட்ட உறுப்புகளைச் சரி செய்யலாம்.

3. தொப்புள் கொடி (அ) நஞ்சுக் கொடி:
சிசு பிறக்கும் முன் தன் தாயுடன் பிணைக்கப்பட உபயோகமாக தொப்புள் கொடி (Umbilical cord) இயற்கையாக அமைந்த ஒன்று. தொப்புள் கொடி மூலம், பிராணவாயு, உணவு என அனைத்தும் குழந்தைக்குத் தாயின் வயிற்றில் இருக்கும்போது கிடைத்தது. சிசு பிறந்ததும் கொடியைத் துண்டித்து விடுவார்கள் மருத்துவர்கள். அக்கொடியில்தான் மிக அதிக அளவில் ஸ்டெம் செல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொப்புள் கொடியிலிருந்து ஸ்டெம் செல்கள் எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு அக்குழந்தைக்கும், சந்ததியினருக்கும் குறைபாடு இருப்பின் அவர்களுக்கு செலுத்தப்பட்டு குணமாக்கப் பயன்படும்.

இவ்வாறாக மூன்று வகையில் எடுக்கப்படும் செல்கள் எப்படி எடுக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப்படுகிறது?

ஸ்டெம் செல் பயன்பாட்டை அறிந்த பிறகு மருத்துவத்துறையில் புரட்சி ஏற்பட்டது எனலாம். ஸ்டெம் செல் எனப்படுவது உறுப்புகளின் அடிப்படை தோற்றுவாய் செல்லாகும். குழந்தையின் தொப்புள் கொடியில் இருக்கும் ஸ்டெம்செல் உடலின் எந்த ஒரு உறுப்பையும் மறுஉற்பத்தி செய்யத் தகுதி உடைய முழுமையான அடிப்படை செல்லாகும்.

இதேபோல் உடலின் மற்ற பாகங்களிலும் `ஸ்டெம்செல்’கள் உள்ளன. ஆனால் அவை குறிப்பிட்ட பணியில் மட்டுமே ஈடுபடும். இந்த இரண்டாம் தர `ஸ்டெம்செல்’களும் பலவித நோய்களை தீர்க்க வல்லது.

தற்போது இந்த ஸ்டெம் செல்களை எளிதாக தானம் செய்ய முடியும் என்று தெரிய வந்துள்ளது. ரத்தத் தட்டுகளைச் சுற்றி இருக்கும் ஒரு வகை ஸ்டெம் செல்கள் பி.பி.எஸ்.சி. எனப்படுகிறது. இவற்றை ரத்தத்தில் இருந்து தனியாகப் பிரிக்கும் முறையை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஸ்டெம் செல் மூலம் ரத்தப்புற்று நோயான லுக்கேமியா மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட சில கொடிய வியாதிகளை குணப்படுத்தலாம் என்று தெரிகிறது.

இந்த வகை ரத்த ஸ்டெம்செல்களை சாதாரணமாக ரத்ததானம் போலவே தானம் செய்ய முடியும். இதற்கான ஒரு சில சோதனைகளுக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் ஸ்டெம்செல் தானம் செய்யலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


2. அடல்ட் (Adult) (அ) ப்ளுரி பொடன்ட் ஸ்டெம்செல் எலும்பு மஞ்ஞையில் (Bone Marrow) காணப்படும் ஸ்டெம் செல்களை நோயாளிகளின் எலும்பிலிருந்தும் அல்லது இரத்தத்திலிருந்தும் பிரித்து எடுத்தபின் அவை சுத்தப்படுத்தும் 'எண்டோடாக்சின் டெஸ்ட்' (Endotaxin Test) முறை மூலம் பாக்ட்ரியாக்கள் இல்லாமல் சுத்தப்படுத்தப்படும். குறைந்தது மூன்று மணிநேரம் 50 மி.லி. அளவு இரத்தம் சுத்தப்படுத்தத் தேவைப்படும். இருதய சம்பந்த நோய்களான அட்வான்ஸ்டு காரனரி ஆர்டரி, இருதய தசை தொய்வு, மாரடைப்பு இருதய வால்வு குறைபாடு போன்றவற்றைக் குணப்படுத்த ஊசி மூலம் நேரடியாக ஸ்டெம் செல்கள் செலுத்தப்படுகிறது. மேலும், மூளையில் அடிப்பட்டு சேதமடையும் பாகங்களைச் சரி செய்யவும், முதுகுத் தண்டு வட (Spinal Cord) அடிகளுக்கும் தண்டு வடத்தை சுற்றி ஸ்டெம் செல்கள் செலுத்தப்படுகின்றன.

ஸ்டெம் செல்கள் தன்னைத் திசுக்களாகவோ, தசைகளாகவோ மாற்றிக்கொள்ளும் தன்மையுடையதாய் உள்ளதால் இருதய தசை, நரம்பு மண்டலம், இரத்தம் கொண்டு செல்லும் தமனி போன்ற எல்லாப் பாகங்களிலும் நேரடியாகவே செலுத்தப்படுகிறது. திசுக்களாக மாறும் இவ்வகை ஸ்டெம்செல்கள் 'ப்ளுரி பொடன்சி' (Pleuri Potency) என அழைக்கப்படும். இரத்தப்புற்று நோய் (Leukaemia), இரத்தம் உருவாகுவதில் குறைபாடு உண்டு பண்ணும் நோய்களான அப்லாஸ்டிக் அனிமியா மற்றும் பரம்பரை நோயான தாலஸ்மியா (Thalassemia) போன்றவற்றை எலும்பின் மஞ்ஞையிலிருந்து எடுக்கப்படும் ஸ்டெம்செல்கள் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.

தொப்புள் கொடி ஸ்டெம்செல் (umfilical cord stemcell) தொப்புள் கொடியில் நிறைந்து காணப்படும் ஸ்டெம்செல் (Mallignant) மேல்க்னன்ட் அல்லாத நோயுள்ளவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறையாளர்களுக்கும், பரம்பரை நோயுள்ளவர்களுக்கும் ஸ்டெம்செல் மிகவும் உபயோகப்படும். இன்று தொப்புள் கொடி ஸ்டெம்செல் மூலம் 45 வகையான நோய்களைத் தீர்க்கும் வகையில் பயன்பட்டு வருகிறது. அல்சமீர், சர்க்கரை வியாதி போன்ற வியாதிகளை ஸ்டெம்செல் மூலம் பூரணமாகக் குணமாக்கும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. எனக்கு ஏற்கனவே 2ஆண் குழந்தைகள் இருகின்றன,3ஆக ஒரு குழந்தை பெற்று அதனுடைய தொப்புள் கொடி ஸ்டெம் செல்லை மற்ற 2 குழந்தைகளுக்கு பயன்படுத்தலாமா?

    ReplyDelete
  3. எனக்கு ஏற்கனவே 2ஆண் குழந்தைகள் இருகின்றன,3ஆக ஒரு குழந்தை பெற்று அதனுடைய தொப்புள் கொடி ஸ்டெம் செல்லை மற்ற 2 குழந்தைகளுக்கு பயன்படுத்தலாமா?

    ReplyDelete
  4. எனக்கு ஏற்கனவே 2ஆண் குழந்தைகள் இருகின்றன,3ஆக ஒரு குழந்தை பெற்று அதனுடைய தொப்புள் கொடி ஸ்டெம் செல்லை மற்ற 2 குழந்தைகளுக்கு பயன்படுத்தலாமா?

    ReplyDelete
  5. எனக்கு ஏற்கனவே 2ஆண் குழந்தைகள் இருகின்றன,3ஆக ஒரு குழந்தை பெற்று அதனுடைய தொப்புள் கொடி ஸ்டெம் செல்லை மற்ற 2 குழந்தைகளுக்கு பயன்படுத்தலாமா?

    ReplyDelete